அகமதாபாத் காந்தி ஆசிரமத்தில் சிற்றுண்டி அருந்தாத டிரம்ப்

0 13417

அகமதாபாத் காந்தி ஆசிரமத்திற்கு வந்த அமெரிக்க அதிபர் டிரம்பும், அவரது மனைவி மெலனியாவும் அங்கு விஷேசமாக தயாரிக்கப்பட்ட உணவு வகைகளை தொட்டு கூட பார்க்கவில்லை என ஆசிரம அறங்காவலர் கார்த்திகேய் சாராபாய் தெரிவித்திருக்கிறார்.

டிரம்பு தம்பதிக்காக, உருளைக்கிழங்கு- பிராகோலி சமோசா, சாக்கலேட் சீஸ் குக்கீஸ், ஆப்பிள்பை உள்ளிட்ட உணவு வகைகளை பிரபல சமையல்கலை நிபுணர் சுரேஷ் கன்னா தயார் செய்து வைத்திருந்தார்.

ஆனால் இவற்றை சுவைக்க டிரம்பும் மெலனியாவும் தவறியது ஆசிரம நிர்வாகிகளுக்கு ஏமாற்றம் அளித்ததாக கூறப்படுகிறது.

உடல் ஆரோக்கியம் தொடர்பான காரணங்களுக்காகவோ அல்லது இந்திய சிற்றுண்டி வகைகளின் மீதான விருப்பமின்மையோ இதற்கு காரணமாக இருக்கலாம் என கருதப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments