டெல்லி கலவர பகுதிகளை பார்வையிட டெல்லி முதல்வர், துணை முதல்வருக்கு உத்தரவு

0 1794

தலைநகர் டெல்லியில் அமைதியும், சுமூக சூழலும் மீண்டும் உருவாக,தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் விரைந்து எடுக்குமாறு, மாநில அரசுக்கு, டெல்லி உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

டெல்லி கலவரம் தொடர்பான வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தபோது, மக்களின் அச்சத்தை போக்க விரைந்து நடவடிக்கை வேண்டியது, நமது கடமை என நீதிபதி அறிவுறுத்தினார்.

1984 ல் டெல்லியில் நிகழ்ந்த சீக்கியர் கலவரம் போன்று மீண்டும் ஒரு பயங்கரம் நிகழ்வதை, ஒருபோதும் அனுமதிக்கக்கூடாது என நீதிபதி வலியுறுத்தினார்.

டெல்லி முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் கலவர பகுதிகளை நேரில் பார்வையிட்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்குமாறும் நீதிபதி கேட்டுக்கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments