உலகம் அழியும் நிலை உருவானால் எதிர்கொள்ள நடவடிக்கை
உலகம் பேரழிவை சந்திக்கும் நிலை வந்தால், அந்த இக்கட்டான சூழ்நிலையை எதிர்கொள்ள ஆர்டிக் பிரதேசத்தில் உள்ள பிரமாண்ட பெட்டகத்தில் லட்சகணக்கான தானிய வகை விதைகள் பாதுகாக்கப்படுகின்றன.
அணுஆயுத போர், கொடிய நோய் உள்ளிட்டவற்றால் உலகம் அழியும்நிலை உருவானால், செடி கொடிகள் இல்லாத நிலை ஏற்படும்.
அப்போது மனிதர்களுக்கு தேவையான உணவு, பழங்கள் உள்ளிட்டவை இல்லாமல் போனால், அதை எதிர்கொள்ளும் வகையில், நார்வே மற்றும் வடதுருவம் இடையேயான பகுதியில் பிரமாண்ட பெட்டகம் நிர்மானிக்கப்பட்டு, அதற்குள் அரிசி, கோதுமை உள்ளிட்ட தானிய வகைகள், பழ வகைகள், பூ வகைகளின் விதைகள் பாதுகாக்கப்படுகின்றன.
இந்தியா, மாலி, பெரு உள்ளிட்ட நாடுகளிலிருந்து 30 வகை தானியங்களின் விதைகள், பிரிட்டன் இளவரசர் தோட்டத்திலுள்ள செடிகளின் அரிய வகைகள் நேற்று கொண்டு வரப்பட்டன.
Comments