வால்ட் டிஸ்னி நிறுவனத்தின் சி.இ.ஓ ராபர்ட் இகர் பதவி விலகல்

0 1774

வால்ட் டிஸ்னி (walt disney) நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியாக செயல்பட்டு வந்த ராபர்ட் இகர் (Robert Iger) தற்போது அந்த பொறுப்பில் இருந்து விலகி உள்ளார்.

இந்த நிறுவனத்தின் 7வது தலைமை செயல் அதிகாரியாக கடந்த 2005ம் ஆண்டு அவர் பொறுப்பேற்றார். பிக்சர் அனிமேஷன் ஸ்டூடியோவை டிஸ்னியுடன் இணைத்தது, மார்வெல், லூக்காஸ், 21 செஞ்சுரி பாக்ஸ் (MARVEL, LUCAS, 21 CENTURY FOX) ஆகிய தயாரிப்பு நிறுவனங்களை வாங்கியது என டிஸ்னியின் வளர்ச்சிக்காக பல்வேறு பணிகளை அவர் செய்துள்ளார்.

சமீபத்தில் ஓ.டி.டி பிளாட்பார்ம் மூலம் டிஸ்னி ப்ளஸ் (DISNEY PLUS) ஸ்டிரீமிங் தளத்தை அறிமுகப்படுத்திய சில மாதங்களிலே 28 மில்லியன் சந்தாதாரர்களை கொண்டு வந்ததில் இவரது பங்கு மிக முக்கியமானதாக கருதப்படுகிறது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments