கடல் பசு உயிரினத்தை கயிறு இழுத்துச் சென்று துன்புறுத்திய 7 பேர் கைது

0 1960

நைஜீரியாவில் கடல் பசு எனப்படும் உயிரினத்தை கயிறு இழுத்துச் சென்று துன்புறுத்திய 7 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அந்த நாட்டின் கடல் பகுதியில் அரிதாகக் காணப்படும் கடல் பசு எனப்படும் உயிரினத்தை பிடிக்கவும், வேட்டையாடவும் தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் சில இளைஞர்கள் கடல் பசுவைப் பிடித்து அதன் வாலைக் கட்டி சாலையில் தரதரவென இழுத்துச் சென்றனர்.

அவ்வாறு இழுத்துச் செல்லப்படும் போது அந்த விலங்கு வலிதாளாமல் துடித்தது. அப்படியிருந்தும் இந்த இளைஞர்கள் அடங்கிய கும்பல் விடாமல் இழுத்துச் சென்றனர். இதுதொடர்பான வீடியோ வெளியானதும் இயற்கை ஆர்வலர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து வீடியோவின் அடிப்படையில் கடல்பசுவை இழுத்துச் சென்ற 7 பேர் கும்பல் கைது செய்யப்பட்டனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments