தேன்சிட்டுக்களை மீட்டெடுக்கும் பணியில் வெற்றி கண்ட இளம்பெண்
மெக்ஸிகோவில் தேன்சிட்டுக்களை மீட்டெடுக்கும் முயற்சியில் இளம்பெண் ஒருவர் வெற்றி பெற்றுள்ளார்.
நாம் கண் இமைப்பதை விட இறக்கையை வேகமாக அடித்துக் கொள்ளும் தேன்சிட்டுக்கள் மெக்ஸிகோ நகரத்தில் அரிதினும் அரிதாகிப் போனது. இதையடுத்து அற்றுப் போகும் நிலையில் இருந்த அந்தப் பறவைகளை மீட்டெடுக்க, உயிரியலாளரான கிளவ்டியா என்பவர் பல்வேறு முயற்சிகள் மேற்கொண்டார்.
மகரந்தச் சேர்க்கைக்கு பெரும் துணையாக இருக்கும் தேன்சிட்டுக்களை கவர்வதற்காக, அதற்குப் பிடித்த மலர் தோட்டங்களை கிளவ்டியா உருவாக்கினார். இதனால் எங்கேயோ, எப்போதோ தென்பட்ட தேன்சிட்டுக்கள் தற்போது பெருகி வருவதாக அவர் குறிப்பிட்டார். காடுகளை அழிப்பதால் இந்தவகைப் பறவைகள் எண்ணிக்கை பெருமளவு குறைந்து விட்டதாகக் கூறும் அவர், 58 வகைகளில் 13 வகை தேன்சிட்டுக்கள் அருகிப் போய் விட்டதாகவும் தெரிவித்தார்.
Comments