நீட்தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு : இடைத்தரகரின் போலீஸ் காவல் நிறைவு

0 1168

நீட்தேர்வு ஆள்மாறாட்ட வழக்கு தொடர்பாக கைதான இடைத்தரகர் வேதாச்சலத்தின் 6 நாட்கள் போலீஸ் காவல் முடிந்து மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்த வழக்கில் மூளையாக செயல்பட்ட வேதாச்சலம் கடந்த14ம் தேதி சேலம் நீதிமன்றத்தில் சரணடைந்ததைத் தொடர்ந்து அவர் சிறையில் அடைக்கப்பட்டார். இந்நிலையில், தேனி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்திய சி.பி.சி.ஐ.டி போலீசார் 6 நாட்கள் காவலில் எடுத்து விசாரித்து வந்தனர்.

விசாரணை முடிவடைந்த நிலையில், அவரை 15 நாட்கள் காவலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. வேதாசலத்திடம் நடத்திய விசாரணையில் மற்றொரு முக்கிய இடைத்தரகர் ரஷீத் பதுங்கியுள்ள இடம் குறித்த தகவல்கள் கிடைத்துள்ளதாக சிபிசிஐடி போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments