கர்தார்பூர்-பாஸ்போர்ட் கட்டாயமாக்குவதை ரத்து செய்யக் கோரிக்கை
பாகிஸ்தானில் உள்ள சீக்கியர் புனிதத் தலமான கர்தார்பூர் செல்லும் பக்தர்களுக்கு விசா தேவையில்லாத போதும் பாஸ்போர்ட் கட்டாயம் என்று அந்நாட்டு அரசு விதித்த கட்டுப்பாட்டை நீக்கக் கோரி பஞ்சாப் சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இப்பிரச்சினை தொடர்பாக பிரதமர் மோடியை நேரில் சந்திக்க உள்ளதாக பஞ்சாப் முதலமைச்சர் அம்ரிந்தர் சிங் தெரிவித்துள்ளார்.தற்போது கர்த்தார்புர் செல்லும் பக்தர்களுக்கு 20 டாலர்கள் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இதனை கணிசமாக குறைக்க வேண்டும் என்றும் பக்தர்கள் கோருகின்றனர்.
குருநானக்கின் இறுதிக்காலத்தை உரைக்கும் கர்த்தார்புர் புனிதத் தலத்திற்கு பாகிஸ்தான் அரசு மேலும் கட்டுப்பாடுகளைத் தளர்த்த வேண்டும் என்றும் பஞ்சாப் அரசு வலியுறுத்தி வருகிறது.
Comments