பீகாரில் தேசியக் குடியுரிமைச் சட்டம் அமல்படுத்தப்பட மாட்டாது.. சட்டசபையில் தீர்மானம் ..!
பீகார் மாநிலத்தில் தேசிய குடியுரிமைச் சட்டம் அமல்படுத்தப்பட மாட்டாது என அம்மாநில சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.
நேற்று நடந்த சட்டசபைக் கூட்டத்தில் முதலமைச்சர் நிதிஷ்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். இந்தக் கூட்டத்தில் என்பிஆர் எனப்படும் தேசிய மக்கள் பதிவேடு திட்டத்தை 2010-ம் ஆண்டு ஷரத்துப் படியே அமல்படுத்த வேண்டும் என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மேலும், தேசிய மக்கள்தொகை பதிவேடு படிவங்களிலிருந்து 'சர்ச்சைக்குரிய உட்பிரிவுகளை' தவிர்க்க வேண்டும் எனக்கோரி மத்திய அரசுக்கு அம்மாநில அரசு கடிதம் எழுதியுள்ளதாகவும் சட்டப்பேரவையில் தெரிவிக்கப்பட்டது.
Comments