கர்நாடகா அரசுப் போக்குவரத்துக் கழக பேருந்துகளில் கட்டணம் உயர்வு
கர்நாடகத்தின் அரசுப் பேருந்துகளின் கட்டணம் 12 சதவீதம் வரை உயர்த்தப்பட்டுள்ளது .
நள்ளிரவு முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்துள்ளது.KSRTC பேருந்துகளின் கட்டண உயர்வால் பெங்களூர் - மைசூர் இடையிலான கட்டணம் 140 ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது. படுக்கை வசதி படைத்த நீண்ட தூரப் பேருந்துகளின் கட்டணம் 100 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. ஆனால் 12 முதல் 15 கிலோமீட்டர் தூரம் வரையிலான சாதாரண பேருந்துக்கு கட்டணம் உயர்த்தப்படவில்லை.
விரைவுப் பேருந்துகளின் கட்டணம் முதல் மூன்று கிலோமீட்டருக்கு 7 ரூபாயில் இருந்து 5 ரூபாயாக குறைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் மற்றும் மாற்றுத் திறனாளிகளுக்கான மாதாந்திர பாஸ் கட்டணம் உயர்த்தப்படவில்லை. எரிபொருள் விலை அதிகரிப்பு காரணமாக போக்குவரத்துக் கழகத்தின் நிதிச்சுமை 260 கோடி ரூபாய் அதிகரித்துள்ளது. ஊழியர்களுக்கான சலுகைகள் ஊதிய உயர்வு காரணமாகவும் கட்டணம் உயர்த்தப்பட்டிருப்பதாக அதிகாரிகள் விளக்கம்அளித்தனர்
Comments