சொகுசு கப்பலில் சிக்கியுள்ள இந்தியர்களை விமானம் மூலம் அழைத்து வர ஏற்பாடு

0 1311

டைமண்ட் பிரின்சஸ் என்ற சொகுசுக் கப்பலில் கொரோனா வைரஸ் பீதியால் சிறைப்படுத்தப்பட்டுள்ள 122 இந்தியர்களையும் இன்று விமானம் மூலம் டெல்லி அழைத்து வருவதற்கான நடவடிக்கைகள் தீவிரம் அடைந்துள்ளன.

கடந்த 2 வாரங்களாக கொரோனா பாதிப்புக்கு ஆளான சொகுசு கப்பல் ஜப்பானின் யோகமோ துறைமுகத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதில் 138 இந்தியர்கள் இருப்பதாக தெரிவிக்கப்பட்டது. இதில் 16 இந்தியர்களுக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அவர்கள் 16 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். சிகிச்சைக்குப் பின்னர் அவர்களின் உடல்நிலையில் முன்னேற்றம் காணப்படுகிறது.

இதனிடையே பாதிப்பு இல்லாத இதர 122 இந்தியர்களை கப்பலில் இருந்து மீட்பதற்கான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டது. இதில் 2 இந்தியர்கள் கப்பலை விட்டு வெளியேறுவதற்கான நிபந்தனைகளை ஏற்பதில் தாமதம் ஏற்பட்டுள்ளது. 122 இந்தியர்களும் டெல்லிக்கு விமானம் மூலம் இன்று அழைத்துவரப்படுவார்கள் என்று தூதரக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments