ஏர் இந்தியா ஏல விற்பனை விண்ணப்பம் காலக்கெடு நீட்டிப்பு
ஏர் இந்தியா விற்பனை ஏலத்துக்கான விண்ணப்பங்களை அளிப்பதற்கான காலக்கெடு அடுத்த மாதம் 17ந் தேதி வரை நீட்டிக்கப்பட உள்ளது.
ஏற்கனவே இந்த ஏல விற்பனைக்கான காலக்கெடு பிப்ரவரி 11ஆம் தேதியில் இருந்து மார்ச் 6ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. உள்துறை அமைச்சர் அமித்ஷா தலைமையிலான அமைச்சர்கள் குழு கூட்டம் இவ்வார இறுதியில் நடைபெறுகிறது.
அக்கூட்டத்தில் ஏல விற்பனைக்கான காலக்கெடு தேதியை நீட்டிப்பது குறித்து முடிவெடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏர் இந்தியா நிறுவனம் தற்போது 60ஆயிரத்து 74 கோடி கடனில் சிக்கி தவிக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Comments