பாய்ந்து தாக்கும் "அப்பாச்சி" பதுங்கி பாயும் "ரோமியோ"

0 5464

அமெரிக்காவிடம் இருந்து இந்தியா வாங்கும், அப்பாச்சி (Apache) மற்றும் ரோமியோ அடைமொழியுடன் அழைக்கப்படும் MH-60 சீஹாக் ((MH-60 Seahawk)) ஹெலிகாப்டர்கள் குறித்த சிறப்பம்சங்களை இப்போது பார்க்கலாம்...

சர்வதேச அளவில் விமானங்கள் தயாரிப்பில் முன்னணியில் திகழும், அமெரிக்காவின் போயிங் நிறுவன தயாரிப்பு தான் அப்பாச்சி(Apache)ஹெலிகாப்டர். அதிவேகமாக சுழலும் வண்ணம் இந்த ஹெலிகாப்டர் வடிவமைக்கப்பட்டது. இரட்டை தாக்குதல் பொறிமுறை கொண்டுள்ளது.

அப்பாச்சி ஹெலிகாப்டர், 58 அடி நீளம், 13 அடி உயரம் கொண்டது. இரவிலும், தாக்குதல் நடத்தும் வண்ணம், சென்சார் மற்றும் அகச்சிவப்பு கதிர் தொழில்நுட்பங்களை கொண்டுள்ளது.

ஹெலிகாப்டரின் சக்கரங்களுக்கு நடுவே, நவீனத் துப்பாக்கி, ஹெல்ஃபையர் (Hellfire) ஏவுகணைகளை செலுத்துவதற்கான 4 ஏவுக்கருவிகள் உள்ளன. இரண்டு போர் விமானிகள் மட்டுமே பயணிக்கும் வகையில், இந்த அப்பாச்சி ஹெலிகாப்டர் வடிவமைக்கப்பட்டுள்ளது. 2 விமானிகளில், ஒருவர், ஹெலிகாப்டரை, எதிரிகளின் இலக்கை நோக்கி செலுத்துவார்; மற்றொருவர், ஆயுத தாக்குதல் தொடுக்கும் பணிகளில் ஈடுபடுவார்.

இயல்பாக மணிக்கு 265 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும். போர் அவசரம் என்றால், சுமார் 300 கிலோ மீட்டர் வேகத்தில், அப்பாச்சி ஹெலிகாப்டர் பாய்ந்து செல்லும். சுமார் 10, ஆயிரம் கிலோ எடை வரையிலான ஆயுதங்களை சுமந்து செல்லும் வல்லமை கொண்டது. தன்னகத்தே உள்ள அதிநவீன துப்பாக்கிக்கள் மூலம், இடைநிற்றலின்றி, ஒரேமுறையில், 1200 ரவுண்டுகள் சுடும் வலிமை கொண்டது..

எதிரிகளின் இலக்கை மிகச்சரியாக குறிபார்த்து தாக்குதல் நடத்தும் வகையில், விமானிகளின் ஹெல்மெட்டில், நவீன நுட்பத்தில் இயங்கும் தொலைநோக்கி பொருத்தப்பட்டுள்ளது. AH-64 Apache ஹெலிகாப்டர்கள், அமெரிக்கா தவிர, சீனா, இங்கிலாந்து, இஸ்ரேல், சிங்கப்பூர், சவுதி அரேபியா உள்ளிட்ட நாடுகள் பயன்படுத்தி வருகின்றன.

இந்த வரிசையில், இந்தியாவும் இணைந்துள்ளது. உலகின் மிகப்பெரிய கோடீஸ்வர ராக இருந்தாலும் அப்பாச்சி ஹெலிகாப்டர்கள் தனியாருக்கு விற்கப்படாது. அமெரிக்காவோடு இணக்கமாக உள்ள நாடுகளின் ராணுவங்களுக்கு மட்டுமே வழங்கப்படும். அதிநவீன தாக்குதல் தொழில்நுட்பத்தில் தயாராகும் அப்பாச்சி ஹெலிகாப்டர் ஒன்றின் விலை, சுமார் 300 கோடி ரூபாய் ஆகும்.

இதபோன்று, அமெரிக்காவின் லாக்ஹீட் மார்டின் (Lockheed Martin) நிறுவனத்திடம் இருந்து, ரோமியோ என அடைமொழியுடன் அழைக்கப்படும், MH-60 சீஹாக் (MH-60 Seahawk) ஹெலிகாப்டர்களையும், இந்தியா கொள்வனவு செய்ய ஒப்பந்தம் செய்துள்ளது.

இந்த சீஹாக் ஹெலிகாப்டர்கள், நீர்மூழ்கி கப்பல்கள் உள்ளிட்ட எச்சூழலிலும், எதிரிகள் மறைந்திருந்து தாக்கினாலும், அதிலிருந்து, லாவகமாக தப்பித்து, அதே எதிரிகளின் நிலையை, தாக்கி அழிக்கும் திறன்படைத்தது.

நிலப்பரப்பிலும், கடற்பரப்பிலும், எதிரிகளின் இலக்கை துல்லியமாக தாக்கும் வல்லமை கொண்டதாகும். மணிக்கு 270 கிலோ மீட்டர் வேகம் வரையில் செல்லக் கூடிய MH-60 சீஹாக் ரோமியோ ஹெலிகாப்டரில், 2 விமானிகள் உட்பட 5 பேர் பயணிக்கலாம். சுமார், 10 ஆயிரம் கிலோ ஆயுத தளவாடங்களை சுமந்து செல்லக் கூடியது. 65 அடி நீளமும், 17 அடி உயரமும் கொண்டது.

கடலுக்கு அடியில் மறைந்திருக்கும் எதிரி நாட்டின் நீர்மூழ்கி கப்பல்களை இனங்காணும் வகையில், அது எத்தனை அடி ஆழத்தில் இருந்தாலும், கண்டுனரும் வகையில், சோனோபியோய் லாஞ்சர், ரேதியோன் சோனார்(Raytheon Sonar) ஆகிய குறைந்த அதிர்வெண் கொண்ட ஒலி அலைகளில் இயங்கும் ரேடார்கள் மற்றும் சென்சார்கள் பொருத்தப்பட்டுள்ளன. இந்திய கடற்பரப்பின் பாதுகாப்பை உறுதி செய்யும் ரோமியோ சீஹாக் ஹெலிகாப்டர் ஒன்றின் விலை 200 கோடி ரூபாய் ஆகும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments