பாகுபலியில் காளகேயர்கள் பேசும் ‘கிளிக்கி ‘ மொழி அறிமுகம்
பாகுபலி திரைப்படம் உலகளவில் பெரும் வெற்றியை பெற்றுள்ள நிலையில் இப்படத்தில் காளகேயர்கள் பேசும் மொழி பெரும்பாலும் மக்களிடையே முனுமுனுக்கப்பட்டது. இப்படத்திற்காக ‘கிளிக்கி ‘ என்ற பெயரில் இம்மொழியினை உருவாக்கியுள்ளார் மதன் கார்க்கி. இந்த மொழிக்கான இணையதள பக்கத்தை உலக தாய்மொழி தினத்தன்று இயக்குனர் ராஜமௌலி அறிமுகப்படுத்தியுள்ளார்.
காளகேயர்கள் பயன்படுத்தும் கிளிக்கி மொழியினை பாகுபலி படத்திற்காகவே மதன் கார்க்கி உருவாக்கியிருக்கிறார். பின்னர் இம்மொழியினை மேற்கொண்டு ஆராய்ந்து அதற்கான ஒலி அகராதியும், பிறமொழியிலிருந்து இம்மொழிக்கான ஒலிமாற்று கருவியும், கிளிக்கி மொழியினை கற்றுகொள்ள புதிய தளமும், அதற்கான எழுத்துருக்களும் அறிமுகபடுத்தியுள்ளார். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை இந்த மொழியினை கற்க வைத்து பயிற்சி வைத்ததில் அவர்களால் இரண்டு மணி நேரத்தில் கிளிக்கி மொழியினை கற்றுகொள்ள முடிகிறது. அந்த அளவிற்கு மற்ற மொழிகளை விட இம்மொழியினை எளிமையான இலக்கன விதிகளோடு விரிவுபடுத்தியுள்ளார்.
உலகில் நாடுகளில் பல மொழிகள் இருந்தாலும் அனைத்தையும் எளிதில் கற்றுகொள்ள முடியாது. அது போல் இந்த கிளிக்கி மொழி இருக்ககூடாது. அனைவராலும் எளிதில் கற்றுகொள்ளும்படி எளிமையான இலக்கண விதிகளோடும் 22 குறியீடுகளை பயன்படுத்தி இந்த மொழியினை உருவாக்கியுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் உலகில் பல மொழிகள் மதம், இனம், சாதி, மனிதம் என ஒவ்வொன்றையும் சார்ந்து இருக்கும் நிலையில் கிளிக்கி மொழியானது எந்த ஒரு அடையாளமும் இல்லாது உலகத்திற்க்கு பொதுவான மொழியாக இருக்கும்.
ஹாலிவுட்டில் எடுக்கப்படும் வரலாற்று பின்னணி படங்கள் மற்றும் டெலிவிஷன் தொடர்களில் புதிய மொழிகளை உருவாக்குவார்கள். அது போல இந்தியாவில் பாகுபலி படத்தில் புதிய மொழியினை உருவாக்கியது இதுவே முதன் முறையாகும். 700 வார்த்தைகள், 40 இலக்கண விதிகளோடு வடிவமைக்கப்பட்ட கிளிக்கி மொழியானது தற்போது விரிவாக்கபட்டு அதற்கென புதிய இணையதளத்தினை அறிமுகபடுத்தி உள்ளார். மேலும் கிளிக்கி மொழியினை கற்று கொள்ள விரும்புவர்களுக்கு காணொலி மூலமாகவும் கற்பித்து வருகிறார்.
Comments