மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் ஆசிரியர்களுக்கு சிறை

0 2021

மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் அரசுப்பள்ளி ஆசிரியர்கள் இருவருக்கு 5 மற்றும் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

செங்கல்பட்டு அரசுப் பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர்கள் நாகராஜ், புகழேந்தி ஆகியோர், மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக 2012ம் ஆண்டு புகார் எழுந்தது.

இது தொடர்பான வழக்கை விசாரித்த செங்கல்பட்டு நீதிமன்றம் போதிய ஆதாரம் இல்லை எனக் கூறி 2018ம் ஆண்டு இருவரையும் விடுதலை செய்தது.

இதனை எதிர்த்து மாணவியரின் பெற்றோர் தாக்கல் செய்த மேல்முறையீட்டு வழக்கில், நாகராஜுக்கு 5 ஆண்டு சிறையும் 24 ஆயிரம் அபராதமும் விதித்த நீதிபதி வேல்முருகன், புகழேந்திக்கு 3 ஆண்டு சிறையும் 4 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments