இந்தியன் 2 படப்பிடிப்பு தள விபத்து தொடர்பாக 6 பேரிடம் விசாரணை

0 1939

இந்தியன் 2  படப்பிடிப்பு தள விபத்து தொடர்பாக, படப்பிடிப்பு அரங்கின் மேலாளர் உள்ளிட்ட 6 பேரிடம் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரணை நடத்தினர்.

கடந்த 19-ம் தேதி, ஈவிபி பிலிம் சிட்டியில் இந்தியன் 2 படப்பிடிப்பின் போது கிரேன் அறுந்து விழுந்து 3 பேர் பலியாகினர். இதுதொடர்பாக லைக்கா நிறுவனம், கிரேன் ஆபரேட்டர் ராஜன், கிரேன் உரிமையாளர், தயாரிப்பு மேலாளர் மீது நசரத்பேட்டை போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.   

வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டு துணை ஆணையர் நாகஜோதி விசாரணை அதிகாரியாக நியமிக்கப்பட்டார்.

இந்த நிலையில் சென்னை காவல் ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் படப்பிடிப்பின் போது பணிபுரிந்த 6 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அரங்கு அமைத்த மேலாளர், கிரேன் ஊழியர்கள் என 6 பேரிடமும் விசாரணை நடத்தி வாக்குமூலம் பெறப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments