பட்டுசேலை வியாபாரிகளுக்கு சொந்தமான 16 இடங்களில் வருமானவரி சோதனை
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே 3 பட்டுசேலை உற்பத்தியாளர்களுக்கு சொந்தமான 16 இடங்களில் வருமான வரித்துறையினர் சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
கொசப்பாளையம் பகுதியில் ஸ்ரீராம் பட்டுசேலை உற்பத்தி மற்றும் விற்பனையகம் நடத்தி வரும் குணசேகர் என்பவருக்கு சொந்தமான, 3 வீடுகள், 3 திருமண மண்டபங்களில் சோதனையில் ஈடுபட்டுள்ள அதிகாரிகள், அவரது உறவினர்களான சொக்கலிங்கம், ராமலிங்கம் ஆகியோர் நடத்தி வரும் டி.சி.ஆர் பட்டுசேலை கடைகளிலும் சோதனை நடத்தி வருகின்றனர்.
வேலூர், திருவண்ணாமலை,காஞ்சிபுரம், சென்னை ஆகிய 4 மாவட்டங்களில் இருந்து வந்த அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ள நிலையில், பல்வேறு முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. குணசேகருக்கு சொந்தமான திருமண மண்டபங்களில் கைப்பற்றப்பட்ட ஆவணங்கள் பட்டுசேலை கடைக்கு கொண்டுவரப்பட்டு விசாரணை நடைபெறுகிறது.
Comments