தலைவி படத்தால் நேரிட்ட அவமானத்தை தாங்க முடியவில்லை: நாவலாசிரியர்

0 3134

கங்கனா ரணாவத் நடிப்பில் உருவாகும் தலைவி படக்கதையின் அடிப்படையாக கூறப்படும் நாவலை எழுதிய அஜயன் பால பாஸ்கரன், இயக்குனர் விஜய் தம்மை அவமானபடுத்தி விட்டதாக  குற்றம்சாட்டியுள்ளார்.

பேஸ்புக் பக்கத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவில், திரைப்படத்துறையில் பலமுறை துரோகத்தை சந்தித்திருந்தாலும், தலைவி படம் மூலம் நேரிட்ட அவமானத்தை ஏற்க முடியவில்லை என குறிப்பிட்டுள்ளார்.

6 மாதகாலம் ஆய்வு செய்து எழுதி கொடுத்த நாவலை  நீதிமன்ற வழக்கில் வெற்றி பெற ஆதாரமாக பயன்படுத்திய பிறகு, படத்திலிருந்து தமது பெயரை நீக்கிவிட்டதாகவும், திரைக்கதையில் மறைந்த தலைவர்களை கொச்சைபடுத்தும் வகையில் சேர்க்கப்பட்ட காட்சிகளை நீக்க கோரியதே இதற்கு காரணமென்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.

இதுகுறித்து இயக்குனர் விஜயின் பதிலை அறிய அவரை செல்போனில் தொடர்பு கொண்ட போதும் பதில் கிடைக்கவில்லை.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments