பாலியல் வழக்கில் ஹார்வே வெய்ன்ஸ்டீன் குற்றவாளி என தீர்ப்பு
பாலியல் வழக்கில் குற்றவாளி என்று தீர்ப்பு வழங்கப்பட்டதும் ஹாலிவுட் பட தயாரிப்பாளர் ஹார்வே வெய்ன்ஸ்டீன் கைது செய்யப்பட்டு ரைக்கர்ஸ் தீவு சிறையில் அடைக்கப்பட்டார்.
பாலியல் வழக்கில் அவரை மன்ஹாட்டன் நீதிமன்றம் குற்றவாளியாக நேற்று தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பு வரும் வரையிலும் நீதிமன்றம் அருகிலுள்ள போர் சீசன்ஸ் (Four seasons) ஹோட்டலில் வழக்கறிஞர்களுடன் விலையுயர்ந்த காபி உள்ளிட்டவற்றை ஹார்வே அருந்திக் கொண்டிருந்தார். தீர்ப்பு வெளியானதும் ஜாமீன் ரத்து செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார்.
பின்னர் கைவிலங்கிட்டு ரைக்கர்ஸ் தீவு சிறைக்கு அழைத்து சென்று அடைக்கப்பட்டார். 11ம் தேதி தண்டனை விவரம் வெளியிடப்படும் வரை, அந்த சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருப்பார். வழக்கில் 25 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.
Comments