விற்பனைக்கு வந்தது Maruti Suzuki-யின் புத்தம் புதிய Vitara Brezza.. சிறப்பம்சங்கள் என்ன தெரியுமா?

0 2595

Maruti Suzuki  நிறுவனத்தின் புதுப்பிக்கப்பட்ட Vitara Brezza (விட்டார பிரெஸ்ஸா) கார் இந்தியாவில் விற்பனைக்கு வந்துள்ளது. புதிய பெட்ரோல் வேரியண்ட்டை அறிமுகப்படுத்தியதன் மூலம், Vitara Brezza பல அம்சங்களுடன் வெளிவந்துள்ளது.

சமீபத்தில் நிறைவு பெற்ற Auto Expo 2020-ல் Maruti Suzuki நிறுவனம் தனது புதுப்பிக்கப்பட்ட Vitara Brezza காரை காட்சிப்படுத்தியிருந்தது. இந்நிலையில் தற்போது இந்த காரை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. Vitara Brezza 2016-ம் ஆண்டில் இந்தியாவில் அறிமுகப்படுத்தபட்ட போது டீசல் என்ஜினுடன் மட்டுமே வந்தது.

இந்தியாவின் மிகவும் பிரபலமான காம்பாக்ட் எஸ்யூவி-யாக இருக்கிறது Vitara Brezza. இந்த கார் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து சுமார் 5 லட்சத்துக்கும் அதிகமான யூனிட்டுகளை விற்பனை செய்துள்ளதாக Maruti Suzuki நிறுவனம் கூறியுள்ளது. இதனால் இந்த காரில் பெட்ரோல் என்ஜின் வேரியண்ட் எப்போது வரும் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், தற்போது இந்த விருப்பத்தை பூர்த்தி செய்து விற்பனைக்கு வந்துள்ளது Vitara Brezza . 2020 Maruti Suzuki Vitara Brezza காரில் புதிய குரோம் கிரில் மற்றும் திருத்தப்பட்ட பம்பர் உள்ளிட்டவை அடங்கும்.imageமேலும் ஹெட்லேம்ப்களில் மாற்றம் செய்யப்பட்டு தற்போது புதிதாக பகல்நேரத்தில் இயங்கும் LED விளக்குகள் மற்றும் LED ப்ரொஜெக்டர் லென்ஸ் உள்ளிட்ட வசதிகள் இடம்பெற்றுள்ளன. அதே போல இந்த காரின் உள்ளும் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. leather-wrapped ஸ்டீயரிங், Smartplay Studio 2.0-வுடன் புதுப்பிக்கப்பட்ட 7 அங்குல தொடுதிரை இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் கொடுக்கப்பட்டுள்ளது.இது ஆட்டோமேட்டிக் கிளைமேட் கன்ட்ரோல், கீ லெஸ் என்ட்ரி உள்ளிட்ட வசதிகளையும் கொண்டுள்ளது.

புதிய Maruti Suzuki Vitara Brezza மூன்று dual-tone வண்ணங்களில் கிடைக்கும். Sizzling Red with Midnight Black roof, Torque Blue with midnight Black roof, Granite Grey with Orange roof உள்ளிட்ட நிறங்களில் விற்பனைக்கு வந்துள்ளது.1.5 லிட்டர் பிஎஸ்-6 பெட்ரோல் எஞ்சின் தேர்வில் வந்துள்ளது Vitara Brezza.

imageஇந்த புதிய எஞ்சின் 6,000 ஆர்பிஎம்மில் 102 பிஹெச்பி மற்றும் 4400 ஆர்பிஎம்மில் 134 என்எம் பீக் டார்க்கை அவுட் செய்கிறது. இந்த மோட்டார் 5-ஸ்பீட் மேனுவல் டிரான்ஸ்மிஷன் மற்றும் 4 ஸ்பீடு டார்கியூ கன்வெர்ட்டர் ஆட்டோமேட்டிக் உடன் இணைக்கப்பட்டுள்ளது. இதில் ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் லித்தியம் அயன் பேட்டரி மற்றும் ஹில் ஹோல்ட் அசிஸ்ட் அம்சத்துடன் கூடிய ஸ்மார்ட் கலப்பின அமைப்பை பெற்றுள்ளது.

இந்த காரில் டாப்-எண்ட் வேரியண்ட்டை தேர்வு செய்தால், ரிவர்ஸ் கேமரா, ஆட்டோ டிம்மிங் ஐ.ஆர்.வி.எம், லெதர் போர்த்தப்பட்ட ஸ்டீயரிங், டிரைவர் ஆர்ம்ரெஸ்ட் மற்றும் தானியங்கி ஹெட்லேம்ப்கள் உள்ளிட்ட பல வசதிகள் கிடைக்கும். புதிய Vitara Brezza-வின் துவக்க வேரியண்ட் விலை ரூ.7.34 லட்சம், டாப் வேரியண்ட் Vitara Brezza-ன் விலை ரூ.11.40 லட்சம் ஆகும்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments