ஒரு வயது மகனை தூக்கில் தொங்க விட்டு தாய் தற்கொலை

0 3132

திருப்பூர் மாவட்டம் அவினாசி அருகே ஒரு வயது மகனை தூக்கில் தொங்கவிட்டு கொலை செய்து விட்டு தாய் தற்கொலை செய்து கொண்ட நிகழ்வு சுற்றுவட்டாரத்தில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

2 ஆண்டுக்கு முன்பு திருமணமான பிரபாகர், துர்கா தேவி தம்பதி, தங்களது ஒரு வயது மகன் ரித்திக்குடன் பெரியாயிபாளையத்தில் வசித்து வந்தனர். தம்பதி இருவருக்கும் கருத்து வேறுபாட்டால் அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.

இந்த நிலையில் நேற்று பிற்பகல் தம்பதிக்கிடையே வாக்குவாதம் முற்றியதாகவும் பின்னர் பிரபாகர் பணிக்கு சென்றுவிட்டதாகவும் சொல்லப்படுகிறது.

மாலையாகியும் துர்காதேவியும் அவரது குழந்தையும் வீட்டை விட்டு வெளியே வாராததால் சந்தேகமடைந்து கதவை திறந்து பார்த்த அக்கம் பக்கத்தினர், இருவரும் தூக்கில் தொங்குவதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். பின்னர் தகவலறிந்து வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி கணவன் பிரபாகரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.



SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments