அதிமுக பொதுக்கூட்ட மேடையில் அமைச்சருடன் அதிமுக நிர்வாகி வாக்குவாதம்

0 1391

ஆவடியில் நடைபெற்ற அதிமுக பொதுக்கூட்டத்தில் மேடையிலேயே அமைச்சர் பாண்டியராஜனுடன், மற்றொரு நிர்வாகி வாக்குவாதத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

ஆவடியில்கடந்த 2 நாட்களுக்கு முன்பு நடந்த கூட்டத்தில் அமைச்சரின் ஆதரவாளரை, முன்னாள் அமைச்சர் அப்துல் ரஹீமின் ஆதரவாளர்கள் தாக்கியதாகக் கூறப்படுகிறது. அதற்கு பதிலடியாக நேற்று நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் கூட்டத்தில், முன்னாள் அமைச்சர் ரஹீமின் ஆதரவாளரை அமைச்சர் பாண்டியராஜனின் ஆதரவாளர் தாக்க முயன்றதாக சொல்லப்படுகிறது.

இதனால் ஆத்திரமடைந்த முன்னாள் அமைச்சரின் ஆதரவாளர் ஒருவர் மேடையிலிருந்த அமைச்சர் பாண்டியராஜனிடம் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். பின்னர் பேசிய அமைச்சர் பாண்டியராஜன் எம்.ஜி.ஆர் பாடல் பாடி ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்பதை வலியுறுத்தினார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments