கோழி இறைச்சியுடன் கொரோனாவை இணைத்து வதந்தி என புகார்- முதலமைச்சரிடம் மனு
கொரோனா வைரஸ் பரவுவதால் கோழி இறைச்சி மற்றும் முட்டைகளை சாப்பிட வேண்டாம் என சமூக வலைதளங்களில் வதந்திகளை பரப்புவோர் மீது நடவடிக்கை எடுக்க கோரி முதலமைச்சரிடம் தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர் சம்மேளத்தினர் மனு அளித்தனர்.
நாமக்கல்லுக்கு வருகை தந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை தமிழ்நாடு கோழிப்பண்ணையாளர் சம்மேளத்தினர் சந்தித்து பேசினர். அப்பொழுது கொரோனா பாதிப்பு இருப்பதால் கோழி இறைச்சி மற்றும் முட்டையை சாப்பிட வேண்டாம் என வதந்திகள் பரப்பப்படுவதால் விற்பனை குறைந்துள்ளதாக புகார் கூறினர். மேலும், கோழி பண்ணையாளர்களுக்கு என தனி நல வாரியம் அமைக்க வேண்டுமெனவும் அவர்கள் கோரிக்கை விடுத்தனர்.
Comments