பால் விலை உயர்வு...!

0 5840

ஜெர்சி, டோட்லா நிறுவனங்களை தொடர்ந்து ஆரோக்கியா நிறுவனம் லிட்டருக்கு 2 ரூபாயும், திருமலா நிறுவனம் லிட்டருக்கு 4 ரூபாயும் பால் விலையை உயர்த்தியுள்ளன.

 தனியார் பால் நிறுவனங்களான ஆரோக்கியா, திருமலா, டோட்லா, ஜெர்ஸி உள்ளிட்டவை கடந்த ஜனவரி மாதம் பாலின் விலையை அதிகரித்தன. இந்நிலையில் ஹெரிடேஜ் நிறுவனம் கடந்த 21 ஆம் தேதி பால் விலையை உயர்த்தியது. இதையடுத்து ஜெர்ஸி, டோட்லா ஆகியவை நேற்று மீண்டும் பால் விலையை லிட்டருக்கு 2 ரூபாயும், தயிர் விலையை லிட்டருக்கு 4 ரூபாயும் உயர்த்தின.

இதையடுத்து ஆரோக்கியா நிறுவனம் தனது அனைத்து வகையான பாலின் விலையையும் இன்று முதல் லிட்டருக்கு 2 ரூபாய் உயர்த்தியுள்ளது. இதேபோல் தயிரின் விலையையும் லிட்டருக்கு 4 ரூபாய் அதிகரித்துள்ளது.புதிய விலை உயர்வின்படி 62 ரூபாயாக இருந்த ஆரோக்கியா புல் க்ரீம் பால் விலை 64 ரூபாயாகவும், ஸ்டான்டர்டஸைட் பால் விலை 52 ரூபாயிலிருந்து 54ஆகவும், டோன்ட் பாலின் விலை 48 ரூபாயிலிருந்து 50ஆகவும் உயர்ந்துள்ளது. 60 ரூபாயாக இருந்த ஒரு லிட்டர் ஆரோக்யா தயிரின் விலை 64 ரூபாயாக விற்பனை செய்யப்படுகிறது.

இன்னொரு தனியார் பால் நிறுவனமான திருமலாவும் பால் மற்றும் தயிரின் விலை லிட்டருக்கு 4 ரூபாய் அதிகரித்துள்ளது. இந்த விலை உயர்வின்படி, திருமலா டோன்ட் மில்க் ஒரு லிட்டரின் விலை 46 ரூபாயிலிருந்து 50 ரூபாயாகவும், கோல்ட் பாலின் விலை 52 ரூபாயிலிருந்து 56 ரூபாயாகவும், புல் க்ரீம் பாலின் விலை 60 ரூபாயிலிருந்து 64 ரூபாயாகவும் அதிகரித்துள்ளது.ஒரு லிட்டர் திருமலா தயிரின் விலை 58 ரூபாயிலிருந்து 62 ரூபாயாக உயர்ந்துள்ளது.

பால் கொள்முதல் விலை அதிகரித்துள்ளதால், விலையை உயர்த்தியுள்ளதாக ஆரோக்யா, திருமலா ஆகியவை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆனால் கோடை காலம் வர இருப்பதால் ஐஸ்க்ரீம் மற்றும் நெய் தயாரிக்க பாலின் க்ரீம் அதிகம் தேவை படுவதால், இப்படி ஒரு செயற்கையான விலை ஏற்றத்தை பால் நிறுவனங்கள் ஏற்படுத்துகின்றன என்று முகவர்கள் சார்பில் குற்றம்சாட்டப்படுகிறது. இதுகுறித்து பால் முகவர்கள் சங்கத்தினர் சார்பில் இன்று காலை 11 மணிக்கு தலைமை செயலகத்தில், முதலமைச்சரிடம் மனு கொடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments