அமெரிக்க செய்தியாளர்களை வெளியேற்றிய சீன அரசு - பதிலடி தர அமெரிக்கா ஆலோசனை
சீனத் தலைநகர் பெய்ஜிங்கில் இருந்த 3 அமெரிக்க செய்தியாளர்களை சீன அரசு வெளியேற்றியதையடுத்து பதிலுக்கு அமெரிக்காவில் பணியாற்றும் சீன செய்தியாளர்களை வெளியேற்றுவது குறித்து அமெரிக்கா ஆலோசித்து வருகிறது.
வால் ஸ்ட்ரீட் பத்திரிகையின் மூன்று செய்தியாளர்கள் வெளியேற்றப்பட்டது குறித்து வெள்ளை மாளிகையில் ஆலோசனை நடைபெற்றது. ஆனால் அது கருத்து சுதந்திரத்திற்கும் அமெரிக்காவின் கொள்கைகளுக்கும் எதிராக இருக்கும் என்று கருத்து தெரிவிக்கப்பட்டுள்ளது.
நூற்றுக்கணக்கான சீன பத்திரிகையாளர்கள் அமெரிக்காவில் பணிபுரிவதால் அவர்களை வெளியேற உத்தரவிடுவது கடுமையான நடவடிக்கை என்று கூறியுள்ள வெளியுறவு அமைச்சர் மைக்கேல் போம்பியோ மிதமான அணுகுமுறையே சிறந்தது எனத்தெரிவித்துள்ளார்.
கொரோனா வைரசால் சீனா பாதிக்கப்பட்டிருக்கம் சூழலில் அமெரிக்கா சீனாவுடன் ஒத்துழைப்பு அளித்து வரும் நிலையும் அதற்கு காரணமாக கூறப்படுகிறது.
Comments