அரசுக்கு எதிராக கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்துபவர்களை தேசவிரோதிகள் என்பது சரியானது அல்ல - உச்சநீதிமன்ற நீதிபதி
அரசுக்கு எதிராக கருத்து வேறுபாடுகளை வெளிப்படுத்துபவர்களை தேசவிரோதிகள் என குறிப்பிடுவது சரியானது அல்ல என உச்சநீதிமன்ற நீதிபதி தீபக் குப்தா தெரிவித்துள்ளார்.
உச்சநீதிமன்ற பார் அசோசியேஷனால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஜனநாயகமும், கருத்து வேறுபாடும் என்ற கருத்தரங்கில் பேசிய அவர், ஜனநாயகத்தில் கருத்து வேறுபாடு என்பது விலைமதிப்பற்ற உரிமை என்றார்.
பெரும்பான்மை என்பது ஜனநாயகத்துக்கு எதிரானது என்ற அவர், அரசை விமர்சிப்பவரை நாட்டுக்கு எதிரானவர் என்று கூறுவதை ஏற்க முடியாது என்றார். அரசின் நிலைப்பாடு எப்போதுமே சரியானதாக இருக்க முடியாது என்றும், மக்களுக்கு அமைதியாக போராடவும், எதிர்ப்புக் கருத்துக்களை வெளிப்படுத்தவும் உரிமை மற்றும் சுதந்திரம் அவசியம் என்றும் அவர் கூறினார். கருத்துவேறுபாடுகளை ஒடுக்குவதோ, அவமதிப்பதோ ஜனநாயகத்தில் விரும்பத்தகாத விளைவுகளை ஏற்படுத்தும் என்றும் அவர் தெரிவித்தார்.
Comments