ரஜினி மனு மீது இன்று மாலைக்குள் முடிவு - விசாரணை ஆணையம்

0 1375

ஓய்வுபெற்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையிலான விசாரணை ஆணையம் முன்பு நேரில் ஆஜராக விலக்கு அளிக்க கோரி நடிகர் ரஜினிகாந்த் தரப்பில் கொடுக்கப்பட்ட மனு மீது இன்று மாலைக்குள் முடிவெடுக்கப்படும் என விசாரணை ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை மேற்கொள்ள அமைக்கப்பட்ட ஒரு நபர் விசாரணை ஆணையம் 19வது கட்ட விசாரணையை நேற்று தொடங்கியது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் உட்பட 31 பேருக்கு நேரில் ஆஜராகும்படி ஆணையம் தரப்பில் ஏற்கனவே சம்மன் அனுப்பட்டிருந்தது.

இதில் நடிகர் ரஜினிகாந்த் நேரில் ஆஜராக விலக்கு அளிக்க கோரி, ஆணையத்திற்கு தனது வழக்கறிஞர் மூலமாக மனு அளித்திருந்தார். இவரது இந்த மீது இன்று மாலைக்குள் முடிவெடுக்கப்படும் என விசாரணை ஆணையம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments