கோகுலம் பால்பண்ணை- உரிமையாளர் வீட்டில் வருமானவரி ரெய்டு
ஈரோடு மாவட்டம் நம்பியூரில் செயல்பட்டு வரும் தனியார் பால்பண்ணை மற்றும் அதன் உரிமையாளர் வீட்டில் வருமான வரித்துறையினர் சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.
நம்பியூரை தலைமையிடமாக கொண்டு கோகுலம் எனும் பெயரில் பழனிசாமி என்பவர் பால்பண்ணை நடத்தி வருகிறார். திருப்பூர் மாவட்டம் உடுமலைப்பேட்டை மற்றும் பொள்ளாச்சியில் இவருக்கு சொந்தமாக பால் பண்ணைகள் உள்ளன.
இந்நிலையில் நம்பியூரில் செயல்பட்டு வரும் பால்பண்ணை மற்றும் அதே பகுதியிலுள்ள உரிமையாளர் பழனிசாமி வீட்டில் 10க்கும் மேற்பட்ட வருமானவரித்துறை அதிகாரிகள் நேற்று மாலை முதல் சோதனை மேற்கொண்டு வருகின்றனர். வரிஏய்ப்பு நடந்துள்ளதாக வந்த புகாரை தொடர்ந்து அதிகாரிகள் சோதனை மேற்கொண்டு வருவதாக கூறப்படுகிறது.
Comments