சமையல் எரிவாயு சிலிண்டரை, வாட்ஸ் ஆப் மூலம் முன்பதிவு செய்யும் வசதி

0 2611

சமையல் எரிவாயு சிலிண்டரை, வாட்ஸ் ஆப் மூலம் முன்பதிவு செய்யும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக என இந்தியன் ஆயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.

செய்தியாளர்களிடம் பேசிய அதன் தமிழகம் மற்றும் புதுச்சேரி செயல் இயக்குனர் ஜெயதேவன், வாடிக்கையாளர்கள் பதிவு செய்த மொபைல் போன் எண்ணில் இருந்து, 75888 88824 என்ற எண்ணுக்கு தகவல் அனுப்பி முன்பதிவு செய்யலாம் என்று தெரிவித்தார்.

எடை கட்டணம் உள்ளிட்டவை தொடர்பாக குறுஞ்செய்தியில் அனுப்பப்படும் லிங்க் மூலமும், இந்தியன் ஆயில் நிறுவன இணையதளத்திலும் வாடிக்கையாளர்கள் புகார் அளிக்கலாம் என்று அவர் கூறினார்.

சிலிண்டர் மானியத் தொகை விவரமும் விரைவில், எஸ்.எம்.எஸ். மூலம் தெரிவிக்கப்படும் என்று அவர் கூறினார். வீடுகளுக்கு குழாய் மூலம் எரிவாயு இணைப்பு வழங்கும் திட்டம் சென்னையில் அடுத்த ஆண்டு அறிமுகப்படுத்தப்படும் என்றும் மின்சார வாகனங்களுக்கு பேட்டரி சார்ஜ் மையங்கள் சென்னையில் மூன்று இடங்களில் அமைக்கப்பட இருப்பதாகவும் அவர் தெரிவித்தார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments