மலேசியப் பிரதமர் மகாதீர் முகமது திடீர் ராஜினாமா
பலத்த அரசியல் எதிர்ப்புகளுக்கு இடையே மலேசிய பிரதமர் மகாதீர் முகமது தமது பதவியை ராஜினாமா செய்துள்ளார். 94 வயதான மகாதீர் கடந்த 2018ம் ஆண்டு இரண்டாவது முறையாக பிரதமராக பதவியேற்றார்.
மக்கள் நீதிக் கட்சியின் தலைவர் அன்வர் இப்ராகீம் மற்றும் மகாதீர் இடையே ஆட்சியை பகிர்ந்துக் கொள்வதற்கான ஒப்பந்தம் ஏற்பட்டது. ஆனால் அன்வருக்கு ஆட்சிப்பொறுப்பை விட்டுக் கொடுக்க மகாதீர் முன்வரவில்லை.
இதையடுத்து அவருக்கு எதிராக அன்வரின் ஆதரவாளர்கள் அணி திரட்டி வந்தனர். இந்நிலையில் அன்வருக்கு ஆட்சிப் பொறுப்பை தரக்கூடாது என்பதற்காக மகாதீர் ராஜினாமா செய்திருப்பதாக கூறப்படுகிறது.
அவரது ராஜினாமாவை ஏற்றுக் கொண்ட மன்னர், மாற்று ஏற்பாடுகள் செய்யப்படும் வரை மகாதீரை இடைக்காலப் பிரதமராக நியமித்துள்ளார்.
Comments