மோசமான சாலைகள் காரணமாக விபத்து.. தேசிய நெடுஞ்சாலை ஆணையத்திற்கு எச்சரிக்கை..!

0 1264

மோசமான சாலைகள் காரணமாக ஏற்படும் விபத்துகளில் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்குவதற்கு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தையும் பொறுப்பாக்க வேண்டிவரும் என சென்னை உயர் நீதிமன்றம் எச்சரித்துள்ளது.

இதுதொடர்பான வழக்கு, உயர்நீதிமன்ற நீதிபதிகள் சத்தியநாராயணன் மற்றும் ஹேமலதா அமர்வில் விசாரணைக்கு வந்தபோது, மத்திய அரசின் அறிக்கையை ஆய்வு செய்த நீதிபதிகள், பணியில் கால தாமதம் குறித்து கேள்வி எழுப்பினர்.

அப்போது, அனைத்து ஒப்புதல்களையும் எளிதில் வழங்கும் வகையில் ஒற்றை சாளர முறையை அமல்படுத்த தமிழ்நாடு அரசுக்கு உத்தரவிட வேண்டுமென மத்திய அரசு தரப்பில் வலியுறுத்தப்பட்டது.

இதை ஏற்ற நீதிபதிகள், தேசிய நெடுஞ்சாலை ஆணைய திட்டங்களுக்கு ஒற்றைச் சாளர முறையில் அனுமதி வழங்குவது தொடர்பாக பதிலளிக்கும் வகையில், தமிழ்நாடு தலைமை செயலாளரை எதிர்மனுதாரராக சேர்த்து உத்தரவிட்டனர்.

மோசமான சாலைகள் காரணமாக விபத்து ஏதும் நேர்ந்தால் பாதிக்கப்பட்டவருக்கு இழப்பீடு வழங்குவதற்கு இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தையும் பொறுப்பாக்க வேண்டிவரும் என எச்சரித்து, விசாரணையை, வருகிற ஏப்ரல் 8ஆம் தேதிக்கு நீதிபதிகள் தள்ளிவைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments