பிரம்மாண்ட விமானத்தை தவிர்த்து சிறிய விமானத்தில் பயணம் செய்த ட்ரம்ப்

0 2851

அமெரிக்க அதிபர் டொனல்டு டிரம்ப், தான் வந்த பிரம்மாண்ட விமானத்தை தவிர்த்து, அதைவிட சிறிய விமானத்தில், ஆக்ரா சென்றது ஏன் என்பதற்கான தகவல் வெளியாகியுள்ளது.

அமெரிக்காவிலிருந்து, அகமதாபாத்திற்கு, "பறக்கும் ஓவல் அலுவலகம்" என்ற அடைமொழியோடு அழைக்கப்படும், ஏர்போர்ஸ் ஒன்  (Boeing 747-200B) என்ற பிரம்மாண்ட விமானத்தில் வந்தார். பின்னர், அகதாபாத்திலிருந்து தாஜ்மஹாலை சுற்றிபார்க்க ஏதுவாக ஆக்ராவிற்கு பயணமானார்.

ஆனால், தான் வழக்கமாக பயணிக்கும் பிரம்மாண்ட விமானத்தில் செல்லாமல், அதைவிட சிறிய விமானத்தில் டிரம்ப் பயணமானார். டிரம்ப் வழக்கமாகச் செல்லும் பிரம்மாண்ட விமானம், ஆக்ராவில் இறங்கி-ஏற போதிய வசதிகள் இல்லை என்பதால், அமெரிக்க விமானப்படைக்குச் சொந்தமான, போயிங்-757 ரக, சி-32 விமானத்தில் பயணமானார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments