தேசத் துரோகிகளை அதே இடத்தில் சுட்டுக்கொல்ல சட்டம் இயற்றுமாறு கர்நாடக அமைச்சர் ஆவேசம்

0 1134

இந்தியாவின் புகழுக்கு இழுக்கு ஏற்படுத்தும் வண்ணம் பேசும் தேசத்துரோகிகளை, அந்த இடத்திலேயே சுட்டுக்கொல்லும் வகையில், சட்டம் இயற்றப்பட வேண்டும் என, கர்நாடக வேளாண்துறை அமைச்சர் பி.சி.பாட்டீல் (B.C.Patil) பேசியிருப்பது, சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.

அண்மையில், பெங்களூருவில், பாகிஸ்தானுக்கு ஆதரவாக முழக்கமிட்டு தேசத் துரோக வழக்கில் கைது செய்யப்பட்ட அமுல்யா விவகாரம் குறித்து கருத்துத் தெரிவித்த அவர், இதனை கூறியிருக்கிறார்.

இந்தியாவில் கிடைக்கும் அனைத்து அடிப்படை வசதிகளையும் ஏகபோகமாக அனுபவித்துவிட்டு, சொந்த நாட்டுக்கு எதிராக முழுக்கமிடுபவர்களை எப்படி ஏற்றுக் கொள்ள முடியும் என்றும், கர்நாடக அமைச்சர் பி.சி.பாட்டீல் (B.C.Patil) கேள்வி எழுப்பியிருக்கிறார். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments