இரட்டை செல்ஃபி கேமராவுடன் அறிமுகமானது இந்தியாவின் முதல் 5G Smart Phone.!
இந்தியாவின் முதல் 5ஜி ஸ்மார்ட் போனை Realme நிறுவனம் இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. Realme X50 Pro 5G என்ற ஸ்மார்ட்போன் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
2020-ம் ஆண்டில் இந்திய ஸ்மார்ட்போன்கள் சந்தையில் மிகப்பெரிய தாக்கத்தை ஏற்படுத்த காத்திருக்கிறது Realme. மொபைல் வேர்ல்ட் காங்கிரஸ் வர்த்தக கண்காட்சி கொரோனாவின் தாக்கத்தால் ரத்துசெய்யப்பட்டது. இந்நிலையில் இந்தியாவில் Realme X50 Pro 5G அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
Realme நிறுவனம் தற்போது அறிமுகப்படுத்தியுள்ள X50 Pro 5G போன்கள் தான், அந்நிறுவனத்தின் மிக விலை உயர்ந்த ஸ்மார்ட் போன்கள் என்பது குறிப்பிடத்தக்கது. Realme X50 Pro 5G புதிய குவால்காம் ஸ்னாப்டிராகன் 865 processor மூலம் இயக்கப்படுகிறது. LPDDR5 RAM ரேம் மற்றும் WiFi 6-ஐ கொண்டுள்ளது. LPDDR5 RAM 29% வேகமானது. மேலும் LPDDR4X RAM உடன் ஒப்பிடும்போது 14% குறைவான சக்தியையே பயன்படுத்தும் என கூறியுள்ளது Realme நிறுவனம். Android 10 ஐ அடிப்படையாகக் கொண்ட Realme UI-ல் இயங்குகிறது.
Realme X50 Pro 5G ஸ்மார்ட் போன் 65 வாட் சூப்பர் டார்ட் சார்ஜிங் ஆதரவுடன் 4,200mAh பேட்டரியைக் கொண்டுள்ளது. இதனை Realme நிறுவனம் சூப்பர் டார்ட் என குறிப்பிட்டுள்ளது. உலகின் அதிவேக ஸ்மார்ட்போன் சார்ஜிங் தயாரிப்பு என்றும் கூறப்பட்டுள்ளது. 0-விலிருந்து 100 சதவீதம் சார்ஜ் அரை மணி நேரத்தில் ஏறிவிடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Realme X50 Pro 5G மொபைலானது கார்னிங் கொரில்லா கிளாஸ் 5 protection உடன் 6.44 இன்ச் சூப்பர் AMOLED 90 ஹெர்ட்ஸ்(1080x2400 pixels) டிஸ்ப்ளேவை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட்போனின் பின்புறத்தில் குவாட் கேமரா அமைப்பு உள்ளது.
இதில் பிரதானமாக 64 மெகாபிக்சல் முதன்மை கேமரா, 12 மெகாபிக்சல் டெலிஃபோட்டோ கேமரா, 8 மெகாபிக்சல் அல்ட்ரா-வைட் லென்ஸ், 2 மெகாபிக்சல் டெப்த் சென்சார் ஆகியவற்றை கொண்டுள்ளது. இந்த ஸ்மார்ட் போன் 20x ஹைப்ரிட் ஜூமை ஆதரிக்கிறது. செல்ஃபி பிரியர்களுக்காக முன்பக்கத்தில் உள்ள பஞ்ச்-ஹோலில் 2 கேமராக்கள் கொடுக்கப்பட்டுள்ளன.
32 எம்பி வைட் ஆங்கிள் சோனி ஐஎம்எக்ஸ் 616 சென்சார் மற்றும் 8 எம்பி அல்ட்ரா-வைட்-ஆங்கிள் கேமரா கொடுக்கப்பட்டுள்ளது. accelerometer, ambient light, gyroscope, fingerprint சென்சார் மற்றும் proximity சென்சார் ஆகியவையும் இதில் அடங்கும்.
Realme X50 Pro 5G ஸ்மார்ட் போன்கள் 3 வேரியண்டுகளில் வெளிவருகிறது. 6 ஜிபி ரேம் + 128 ஜிபி storage வேரியண்ட் விலை ரூ.37,999 என அறிவிக்கப்பட்டுள்ளது. 8 ஜிபி ரேம் + 128 ஜிபி storage வேரியண்டின் விலை ரூ.39,999 என்றும், 12 ஜிபி ரேம் + 256 ஜிபி storage வேரியண்டின் விலை ரூ.44,999 என்றும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Comments