மூதாட்டியைக் கொன்ற வழக்கில் 9 ஆண்டுகளுக்குப் பின் கைது செய்யப்பட்டுள்ள குற்றவாளிகள்
திருச்சியில் மூதாட்டியைக் கொன்று நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் காவல் ஆய்வாளரின் மேல்முறையீட்டு மனுவால் 9 ஆண்டுகளுக்குப் பின் குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கடந்த 2011ஆம் ஆண்டு பெல் குடியிருப்பு வளாகத்தில் மூதாட்டி ஒருவரை அடித்துக் கொன்று நகைகளைப் பறித்ததாக அங்கு ஓட்டுநராகப் பணியாற்றிய முரளியும் அவனது நண்பன் கார்த்திக்கும் கைது செய்யப்பட்டனர். ஆனால் போதிய ஆதாரம் இல்லை எனக் கூறி, கடந்த 2015ஆம் ஆண்டு இருவரும் வழக்கிலிருந்து விடுவிக்கப்பப்பட்டனர்.
இந்த நிலையில் பெல் காவல்நிலையத்துக்கு 2018ஆம் ஆண்டு ஆய்வாளராக வந்த சண்முகசுந்தரம் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மேல்முறையீடு செய்து வழக்கை நடத்தி வந்தார். இதில் முரளியும் கார்த்திக்கும் குற்றவாளிகள் என உறுதி செய்யப்பட்டதை அடுத்து இருவரும் கைது செய்யப்பட்டனர்.
Comments