டிரம்பை வரவேற்கும் கார்டூனை வெளியிட்டுள்ள குஜராத்தின் "அமுல்"

0 1406

தமிழ்நாட்டின் ஆவின் போன்று, குஜராத்தில், மாநில அரசால் நிர்வகிக்கப்படும், "அமுல்" பால் பொருட்கள் விற்பனை நிறுவனம், டிரம்பை வரவேற்கும் விதமாக, தனது பிரத்யேக கார்டூனை மாற்றி அச்சிட்டுள்ளது.

அமெரிக்காவிலிருந்து நேரடியாக அகமதாபாத் வந்தவருக்கு, "நமஸ்தே டிரம்ப்" என்ற தலைப்பில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட்டது. இதையொட்டி, குஜராத் அரசின் அமுல் பால் பொருட்கள் விற்பனை நிறுவனமும், தனது பங்கிற்கு, "நமஸ்கே பிரசிடெண்ட் டிரம்ப்" ("Namaske President Trump") என பிரதமர் நரேந்திர மோடி, டிரம்ப், கார்டூன் படங்களுடன், புதிய சித்திரத்தை அச்சிட்டுள்ளது.

தனது அனைத்து பால் பொருட்கள் பாக்கெட்டுகளிலும், பிரத்யேக கார்டூனை அச்சிட்டு, இந்தியா வந்த டிரம்பை "அமுல்" நிறுவனம் வரவேற்றுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments