அமெரிக்காவில் இந்திய இளைஞர் துப்பாக்கியால் சுட்டுக் கொலை
அமெரிக்காவில் முகமூடி அணிந்த கொள்ளையன் துப்பாக்கியால் சுட்டதில் இந்தியர் ஒருவர் பலியானார்.
ஹரியானா மாநிலம் கர்னலை சேர்ந்த மணீந்தர் சிங் என்பவர், லாஸ் ஏஞ்சலீஸ் அடுத்த விட்டியர் நகரில் மளிகை கடை ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். கடந்த சனிக்கிழமை அவர் பணிபுரிந்த கடைக்கு கொள்ளையடிக்க வந்த மூகமூடி அணிந்த கொள்ளையன், துப்பாக்கியால் சுட்டு விட்டு தப்பிச் சென்றான்.
அதில் மணீந்தர் சிங் பலியானார். இரண்டு குழந்தைகளுக்கு தந்தையான மணீந்தர் சிங் கடந்த 6 மாதங்களுக்கு முன்பே அமெரிக்கா வந்துள்ளார். அவரது வருமானத்தை நம்பியே அவரது குடும்பம் இருப்பதாக கூறும் அவரது சகோதரர், மணீந்தரின் உடலை இந்தியா கொண்டு செல்ல நிதி திரட்டும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
Comments