ரசாயனம் தெளித்து பழுக்க வைக்கப்பட்ட 6 டன் வாழைப்பழங்கள் பறிமுதல்.

0 1470

சேலம் சின்னக்கடை வீதியில், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் மேற்கொண்ட அதிரடி சோதனையில், ”எர்த்தோபார்ம்” ரசாயனம் தெளித்து பழுக்க வைக்கப்பட்ட 6 டன் எடையிலான வாழைப்பழங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

இது தொடர்பாக 5 வாழைப்பழ மண்டி உரிமையாளர்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டதோடு, ’எர்த்தோபார்ம்’ ரசாயனம் மற்றும் தெளிப்பான் கருவிகளும் பறிமுதல் செய்யப்பட்டன.

இது குறித்து உணவு பாதுகாப்பு துறை நியமன அதிகாரி கதிரவன் கூறுகையில், ரசாயனம் மூலம் 10 மணி நேரத்தில் பழுக்க வைக்கப்படும் வாழைப்பழத்தை உட்கொண்டால், அல்சர் மற்றும் தோலில் அலர்ஜி ஏற்படக்கூடும் எனவும், தொடர்ந்து சாப்பிட்டு வரும் பட்சத்தில் புற்றுநோய் வர வாய்ப்புள்ளதாகவும் எச்சரித்தார் .

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments