சாலையோர உணவகத்தில் விற்பனை செய்யப்படும் ஐஸ்கிரீம் தோசைக்கு ஆனந்த் மகிந்த்ரா பாராட்டு
பெங்களூரில் சாலையோர உணவகத்தில் விற்பனை செய்யப்படும் ஐஸ்கிரீம் தோசைக்கு, முழு மதிப்பெண்கள் அளிப்பதாக தொழிலதிபர் ஆனந்த் மகிந்த்ரா பாராட்டு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள அவர், பெங்களூரில் பரபரப்பாக விற்பனை செய்யப்படும் ஐஸ் கிரீம் தோசை குறித்த வீடியோவையும் பகிர்ந்துள்ளார்.
இந்த தோசைக்கு தான் ரசிகரில்லாத போதும், அதனை உருவாக்கியவரின் புதுமையான சிந்தனைக்காக முழு மதிப்பெண்கள் அளிப்பதாக தெரிவித்துள்ள ஆனந்த் மகிந்த்ரா, உண்மையில் இந்தியாவின் சாலையோர வியாபாரிகள் புதுமைகளின் வற்றாத ஆதாரம் எனவும் புகழாரம் சூட்டியுள்ளார்.
மேலும் தங்கள் குழுமத்தின் அனைத்து வடிவமைப்பு குழுவினரையும், அவ்வப்போது இந்த வியாபாரிகளை பார்த்து உத்வேகம் பெற வேண்டும் என்றும், அவர் வலியுறுத்தியுள்ளார்.
Comments