இந்தியாவிற்கு இறக்குமதியாகும் கச்சா எண்ணெய் விலை 15 சதவீதம் வரை குறை
கொரானா வைரசால் பாதிக்கப்பட்டுள்ள சீனாவில் எண்ணெய் சுத்திகரிப்பு வெகுவாக குறைந்துள்ளதால், இந்தியாவில் இறக்குமதியாகும் கச்சா எண்ணெய் விலை மிகவும் குறைந்துள்ளது.
அதிகமாக கச்சா எண்ணெய் இறக்குமதி செய்யும் உலக நாடுகளின் பட்டியலில் 3ஆவது இடத்தில் உள்ள இந்தியா சவூதி, ஈரான், ஈராக் உள்ளிட்ட நாடுகளில் இருந்து எண்ணெய் இறக்குமதி செய்துவருகிறது.
இந்நிலையில் கொரானாவின் கோரப்பிடியில் சிக்கித் தவிக்கும் சீனாவில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு பெருமளவில் முடங்கியுள்ளது.பிப்ரவரி மாதத்தில் ஒரு நாளைக்கு சுமார் 1.5 மில்லியன் பீப்பாய்கள் அளவுக்கு எண்ணெய் சுத்திகரிப்பானது குறைந்தது.
சீனாவின் இந்த முடக்க நிலை இந்தியாவுக்கு சாதகமாக மாறியுள்ளது. அந்த வகையில், இந்தியாவில் இறக்குமதியாகும் கச்சா எண்ணெயின் சில தரங்களின் விலை 15 சதவிகிதம் வரை குறைந்துள்ளது.
Comments