அரசியல் நெருக்கடியால் அரசருக்கு ராஜினாமா கடிதம் அனுப்பினார் மலேசிய பிரதமர் மகாதீர்

0 1498

மலேசியாவில் நிலவி வரும் அரசியல் நெருக்கடி காரணமாக பிரதமர் மகாதீர் முகமது தனது ராஜினாமா கடிதத்தை அரசருக்கு அனுப்பியுள்ளார்.

2018 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிக இடங்களில் வெற்றி பெற்ற மகாதீர் முகமதின் மலேசிய ஐக்கிய மக்கள் கட்சி, மக்கள் நீதி கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைத்தது. உலகின் மிக வயதான பிரதமர் என்ற பெருமையுடன் 94 வயதான முகமது கடந்த 2 ஆண்டுகளாக ஆட்சி நடத்தி வந்த நிலையில், தற்போது கூட்டணி கட்சிகளுக்கு இடையே பிளவு ஏற்பட்டுள்ளது.

ஆட்சிக்கு வந்து சில வருடங்களில் பொறுப்பை தன்னிடம் வழங்குவதாக கூறிய முகமது, சத்தியத்தை மீறி ஏமாற்றி விட்டதாக குற்றஞ்சாட்டி மக்கள் நீதி கட்சி தலைவர் அன்வர் நேற்று பேட்டியளித்தார். இதையடுத்து தங்கள் ஆதரவாளர்களுடன் இரு தலைவர்களும் தனித்தனியே ஆலோசனை நடத்திய நிலையில் பதவி விலகும் முடிவை பிரதமர் மகாதீர் முகமது எடுத்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments