தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கில் மு.க.ஸ்டாலின் ஆஜராகாததால் விசாரணை ஒத்திவைப்பு

0 1104

தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கில் மு.க.ஸ்டாலின் ஆஜர் ஆகாததையடுத்து விசாரணையை மார்ச் 4 ஆம் தேதிக்கு நீதிபதி ஒத்திவைத்தார்.

உள்ளாட்சித்துறை ஊழல் துறையாக மாறிவிட்டது என்று கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் முரசொலியில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டு இருந்தார். இது தொடர்பாக அமைச்சர் எஸ்.பி. வேலுமணி தரப்பில் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கு விசாரணையின்போது நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க ஸ்டாலினுக்கு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்த போது, இன்று ஆஜராவதில் இருந்து விலக்கு அளிக்குமாறு ஸ்டாலின் தரப்பில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது.

இதனையடுத்து வழக்கின் விசாரணை மார்ச் 4 ஆம் தேதிக்கு தள்ளிவைத்த நீதிபதி, அன்று மு.க.ஸ்டாலின் நேரில் ஆஜராக உத்தரவிட்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments