நீர்நிலைகளில் மூழ்கி உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்க நடவடிக்கைகள்

0 1286

ஏரி, குளங்களில் மூழ்கி உயிரிழப்புகள் ஏற்படுவதை தடுக்க எடுத்துள்ள நடவடிக்கைகள் குறித்து மார்ச் 9ம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்யாவிட்டால் நேரில் ஆஜராகும்படி உத்தரவிட நேரிடும் என, மாவட்ட ஆட்சியர்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் எச்சரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பாக தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கு ஏற்கனவே விசாரணைக்கு வந்தபோது, கோவில் குளங்களில் மூழ்கி உயிரிழப்பு ஏற்படாமல் தடுக்க எடுத்த நடவடிக்கைகள் குறித்து இந்து சமய அறநிலைய துறை அறிக்கை தாக்கல் செய்திருந்தது.

இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது மாவட்ட ஆட்சியர்கள் சார்பில் அறிக்கை தாக்கல் செய்ய அவகாசம் கோரப்பட்டது. இதை ஏற்ற நீதிபதிகள், அறிக்கை தாக்கல் செய்யாத மாவட்ட ஆட்சியர்கள் நேரில் ஆஜராக நேரிடும் என எச்சரிக்கை விடுத்து வழக்கை மார்ச் 9ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments