’வெளிநாடுகளில் பெறும் தோல்விகள்’ குறித்து கேப்டன் கோலி ஓப்பன் டாக்

0 1288

நியூசிலாந்திற்கு எதிரான முதல் டெஸ்ட் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணியின் தோல்விக்கு, பேட்டிங்கில் ஏற்பட்ட பின்னடைவே காரணம் என கேப்டன் விராட் கோலி தெரிவித்துள்ளார்.

தோல்வி குறித்து கருத்து தெரிவித்துள்ள கோலி, இந்த போட்டியில் டாஸில் ஜெயிப்பது என்பது முக்கியமான ஒரு விஷயம். டாஸில் தோற்றிருக்க கூடாது. அதே போல எதிரணிக்கு சவால் விடும் வகையில் நாங்கள் விளையாடவில்லை. பந்துவீச்சாளர்களும் இன்னும்கட்டுக்கோப்புடன் செயல்பட்டிருக்க வேண்டும்.

பேட்டிங்கில் மொத்தமாக பின்னடைவு ஏற்பட்டுவிட்டது. அதே போல ஒரு டெஸ்ட் தோல்வியை மட்டும் வைத்து கொண்டு எங்களை மோசமான அணி என்று கூற முடியாது. இந்த தோல்வியால் உலகமே முடிந்துவிட்டது போன்று நினைக்கவில்லை. பேட்டிங்கில் வெளுத்து கட்டினால் மட்டுமே பந்து வீச்சாளர்களால் எதிரணிக்கு சவால் விடுக்க முடியும். ஆனால் இந்த போட்டியில் அது நடக்கவில்லை.

சொந்த மண்ணில் சிறப்பாக விளையாடி வெற்றிகளை குவித்தாலும், வெளிநாடுகளில் எங்கள் ஆட்டத்திறனை இன்னும் மேம்படுத்த வேண்டும் என்பதை ஏற்று கொள்கிறோம் என கூறியுள்ளார் கோலி. அதே சமயம் வெற்றி, தோல்வி என்பது விளையாட்டின் ஒரு பகுதி. எதுவாயினும் அதிலிருந்து நாம் கற்பது விளையாடும் விதத்தை. அந்த வகையில் நாங்கள் விளையாடும் விதங்களை கற்று கொண்டதில் பெருமை கொள்கிறோம் என்றார்.

தனது பேட்டிங் திறன் பற்றி தெரிவித்த கோலி, நன்றாக இருக்கிறேன். நன்றாக பேட்டிங் செய்கிறேன், சில நேரங்களில் எடுக்கும் ரன்கள் பேட்டிங் திறனை பிரதிபலிக்காது என்று நினைப்பதாக குறிப்பிட்டார்.

இந்த சுற்றுப்பயணத்தில் அணி வெற்றி பெற்றால் 40 ரன்கள் அடித்திருந்தால் கூட நல்லது. அணி தோற்றால் 100 ரன்கள் அடித்திருந்தால் கூட பொருத்தமற்றது என்ற மனநிலையில் இருக்க போவதாக கூறியுள்ளார் கோலி.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments