மனைவியை கொன்று நாடகம்... கணவர் - காதலி தற்கொலை !

0 2533

இளம் பெண்ணுடனான தகாத உறவை கண்டித்த 6 மாத கர்ப்பிணி மனைவியை மயக்க ஊசி போட்டும், கழுத்தை அறுத்தும் கொலை செய்த கணவர், கொள்ளை நடந்தது போல் நாடகமாடியது அம்பலமானது.

இதனால் ரயில் முன் பாய்ந்து கணவரும், தூக்குப்போட்டு அவரது கள்ளக் காதலியும் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் நடந்துள்ளது.கர்நாடக மாநிலம் சிக்மகளூரு மாவட்டம் கடூர் பகுதியை சேர்ந்த பல் மருத்துவர் ரேவந்த். இவரது மனைவி கவிதா. இவர்களுக்கு 7 மாத கைகுழந்தையும் 5 வயதில் மகனும் உள்ளனர்.

இந்நிலையில் மீண்டும் கர்ப்பமாகி 6 மாதமான கவிதா வீட்டில் உள்ள கார் ஷெட்டில் கழுத்து அறுபட்டு சடலமாக கிடந்தார். அவரை மர்மநபர்கள் கொன்று நகை பணத்தை கொள்ளையடித்து சென்றதாக ரேவந்த் போலீசில் புகார் அளித்தார்.

ஆனால் மருத்துவமனையில் நடந்த உடற்கூறாய்வில், இடுப்பில் மயக்க ஊசி போடப்பட்டு, பின்னர் கழுத்தை அறுத்து கொலை செய்திருப்பது தெரிய வந்தது.

இதனால் ரேவந்த் மீது சந்தேகம் ஏற்பட்டு போலீசார் விசாரித்தபோது, ரேவந்த்துக்கு பெங்களூரைச்சேர்ந்த ஹர்சிதா என்ற இளம்பெண்ணுடன் தகாத உறவு ஏற்பட்டு, அவரை சந்திக்க அடிக்கடி பெங்களூர் சென்றதுடன், இதை தட்டி கேட்டதால், கவிதாவை மயக்க ஊசி போட்டு பின்னர் கார் ஷெட்டில் வைத்து கழுத்தை அறுத்து கொலை செய்து இருப்பதும் கண்டு பிடிக்கப்பட்டது.

இதற்கிடையே தான் கொலை செய்திருப்பது அமபலமானதை அறிந்த ரேவந்த், கடூரில் ரயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார். இதற்கிடையே இதனை அறிந்த அவரது தோழி ஹர்சிதாவும் பெங்களூரில் உள்ள வீட்டில் தூக்கில் தொங்கினார். இருவரது சடலத்தையும் கைப்பற்றிய போலீசார் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.

தவறான நடத்தையால் குடும்பமே சீரழிந்த நிலையில் 7 மாத கைக்குழந்தையும் 5 வயது மகனும் அனாதையாகி தவிக்கும் நிலை ஏற்பட்டிருப்பதாக உறவினர்கள் வேதனை தெரிவித்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments