அரசுப் பள்ளியை பார்வையிடும் போது டெல்லி முதலமைச்சர் பங்கேற்பதில் ஆட்சேபனை இல்லை

0 2480

டெல்லியிலுள்ள அரசுப் பள்ளியை மெலானியா ட்ரம்ப் பார்வையிடும் நிகழ்ச்சியில் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் பங்கேற்பதில் ஆட்சேபனை இல்லை என அமெரிக்க தூதரகம் தெரிவித்துள்ளது.

இந்திய பயணம் மேற்கொண்டுள்ள அமெரிக்க அதிபர் ட்ரம்ப், மெலானியா ஆகியோர் அகமதாபாத், ஆக்ராவை தொடர்ந்து டெல்லி வந்தடைகின்றனர். தொடர்ந்து நாளை பிரதமர் மோடியுடன் ட்ரம்ப் பேச்சுவார்த்தை நடத்தும் சமயத்தில் டெல்லியிலுள்ள அரசு பள்ளியை மெலானியா பார்வையிடவுள்ளார்.

இந்த நிகழ்ச்சியை உறுதி செய்துள்ள அமெரிக்க தூதரகம், அந்நிகழ்ச்சியில் டெல்லி முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால், துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா ஆகியோர் பங்கேற்பதில் ஆட்சேபம் இல்லை என தெரிவித்துள்ளது.

பிரதமர் அலுவலக பயணத் திட்டத்தில், எந்த முதலமைச்சருக்கும் இடமளிக்கப்படாத நிலையில், இது அமெரிக்க தூதரகத்தின் தனிப்பட்ட முடிவென தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments