அயனாவரம் சிறுமி பாலியல் வழக்கில் தண்டனையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீது பதிலளிக்க உத்தரவு
சென்னை அயனாவரம் சிறுமி பாலியல் வன்கொடுமை வழக்கில் தண்டனையை எதிர்த்து 2 பேர் தாக்கல் செய்த மனு மீது 4 வாரத்தில் பதிலளிக்க காவல்துறைக்கு உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அடுக்குமாடி குடியிருப்பில் மாற்றுத் திறனாளி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் உமாபதி என்பவர் தண்டனையை எதிர்த்து ஏற்கனவே மேல்முறையீடு செய்திருந்தார்.
இந்நிலையில், தங்களது ஐந்து ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்யக் கோரி லிப்ட் ஆப்ரேட்டர் தீனதயாளன், வீட்டு வேலை செய்த ஜெயராமன் ஆகிய இருவரும் மேல் முறையீடு செய்துள்ளனர். தங்களுக்கு எதிராக நேரடி ஆதாரங்கள் இல்லை என்பதால், தண்டனையை நிறுத்தி வைத்து ஜாமீன் வழங்கவும் கோரியிருந்தனர். இந்த மனுக்களை விசாரித்த நீதிபதிகள், அயனாவரம் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் நான்கு வாரங்களில் பதிலளிக்க உத்தரவிட்டனர்.
Comments