இந்தியப் பங்குச்சந்தைகளில் இன்று கடும் சரிவு

0 1175

இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று கடும் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.

மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் ஒரு கட்டத்தில் 483 புள்ளிகள் சரிந்து 40 ஆயிரத்து 687 புள்ளிகளாக வர்த்தகமானது. டாட்டா ஸ்டீல் நிறுவன பங்குகள் அதிகபட்சமாக 4 சதவீத சரிவுடனும், ஹெச்டிஎப்சி, ஐசிஐசிஐ மற்றும் ஆக்சிஸ் வங்கி நிறுவன பங்குகள் 2 சதவீத சரிவுடனும் வர்த்தகமாகின.

தேசியப் பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டியும் 135 புள்ளிகள் குறைந்து 11 ஆயிரத்து 945 புள்ளிகளாக வர்த்தகம் நடைபெற்றது. நிஃப்டியின் அனைத்து துறைசார் குறியீடுகளும் சரிவுடனேயே வர்த்தகமாகி வருகின்றன.

உலோக துறைசார் குறியீடு அதிகபட்சமாக 3 சதவீதம் சரிந்தது. சீனாவுக்கு வெளியிலும் வேகமாக பரவி வரும் கொரானாவின் தாக்கத்தால், ஆசிய பங்குச்சந்தைகளை தொடர்ந்து இந்தியப் பங்குச்சந்தைகளும் சரிவுடன் வர்த்தகமாகி வருகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments