கள்ள நோட்டு தயாரித்து புழக்கத்தில் விட முயன்ற 3 பேர் கைது

0 1041

கோவையில் கள்ள நோட்டு தயாரித்து புழக்கத்தில் விட முயன்ற 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

மணியக்காரன் பாளையம் பகுதியில் நின்றிருந்த இரு நபர்களை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து சோதனையிட்டதில், 60 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகள் சிக்கியது. இதையடுத்து கிதர் முஹம்மது, மகேந்திரன் என்ற அவர்களிடம் விசாரித்ததில் தடாகம் சாலையைச்சேர்ந்த சூரியகுமார் தயாரித்து கொடுத்ததாக தெரிவித்தனர்.

அதன்பேரில் அவரது வீட்டில் இருந்த கம்ப்யூட்டர், பிரிண்டர், லேமினேஷன் கருவிகளை கைப்பற்றி, அங்கிருந்த 2 லட்சத்து 64 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கள்ள நோட்டுகளை பறிமுதல் செய்தனர். சூரியகுமார் உள்ளிட்ட 3 பேரையும் கைது செய்து, இதற்கு முன்பு புழக்கத்தில் விட்டுள்ளனரா?பின்னணியில் கும்பல் உள்ளதா என்று விசாரித்து வருகின்றனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments