தென்னாப்பிரிக்காவில் இருந்து இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்ட மும்பை நிழல் உலக தாதா ரவி புஜாரி

0 1071

மும்பை நிழல் உலக தாதாக்களில் ஒருவனான ரவி புஜாரி, தென்னாப்பிரிக்காவில் கைது செய்யப்பட்டு பெங்களூருவுக்கு கொண்டு வரப்பட்டுள்ளான்.

கர்நாடகத்தை சேர்ந்த புஜாரி,  சோட்டா ராஜனுடன் ஆரம்பத்தில் இணைந்து செயல்பட்டான். அவன்மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில், 20 ஆண்டுகளாக போலீஸார் அவனை தேடி வந்தனர்.

பர்கினோ பாசோ நாட்டின் பாஸ்போர்ட் உடன் அந்தோனி பெர்னான்டஸ் என்ற புதிய அடையாளத்துடன் இருந்த ரவியை, கடந்த ஆண்டு செனகல் போலீஸார் கைது செய்தனர். இருப்பினும் ஜாமீனில் வந்து தலைமறைவான ரவியை தென்னாப்பிரிக்க போலீஸார் நேற்று கைது செய்தனர்.

இதையடுத்து, இந்தியாவிற்கு நாடு கடத்தப்பட்டுள்ள ரவி புஜாரியை, நீதிமன்ற காவலில் எடுத்து விசாரிக்க உள்ளதாக கர்நாடக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments